#Breaking: பிரபல காமெடி நடிகர் மரணம்!
மலையாள திரையுலகின் காமெடி கிங் நடிகர் இன்னசென்ட் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சுவாச கோளாறு காரணமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள காமெடி நடிகரும், சாலக்குடி பகுதியின் முன்னாள் எம்.பி.யுமான இன்னசென்ட், மார்ச் 3 ஆம் தேதி, கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுவார கோளாறு காரணமாக தொடர்ந்து ICU-வில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவருக்கு வயது 75. இவருடைய மரணம் குறித்து வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில், சுவாச பிரச்சனையின் காரணமாக அவரின் உறுப்பு செயலிழந்து, மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் மரணம் ஒட்டுமொத்த மலையாள திரையுலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துளளது.
நடிகர் இன்னசென்ட் மலையாள சினிமாவில், மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகராவார். தனித்துவமான உடல்மொழி, முகபாவனை என போன்றவற்றால் பல ரசிகர்களை சிரிக்க வைத்தவர். இதுவரை சுமார் 600க்கும் மேற்பட்ட படங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார் . இவரின் மரண செய்து குறித்து அறிந்து மலையாள திரையுலகினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சுமூக வலைத்தளம் மூலமாக தங்களின் இரங்கலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.