ரஜினிகாந்த், சத்யராஜ், போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் அல்வா வாசு. சமீப காலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உடல், அவருடைய சொந்த ஊரான மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க பட்டிருந்தார்.

கடந்த சில மாதங்களாக தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு, இனி மருத்துவம் பார்க்க பணம் இல்லாததால் அவருடைய குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

மேலும் அவருடைய மனைவி தன்னுடைய கணவர் உயிரை காப்பாற்ற அனைவரும் உதவுமாறும் கேட்டுள்ளதாக, தகவல்களும் பரவியது.

இந்நிலையில் நேற்றிரவு அல்வா வாசு அவர் வீட்டில் காலமானார்.அவருடைய இறுதி சடங்கு இன்று நடக்கிறது.
மறைந்த அல்வா வாசுவுக்கு அமுதா என்ற மனைவியும், கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகளும் உள்ளனர்.