comedy actor balaji and nithya issue
வெள்ளித்திரையில் , காமெடி வேடத்தில் கலக்கிய நடிகர் தாடி பாலாஜி தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் இவருக்கும் இவருடைய மனைவிக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. இதன் விளைவாக இவருடைய மனைவி நித்தியா , மாதவரத்தில் உள்ள காவல் நிலையத்தில். கணவர் தாடி பாலாஜி தன்னை ஜாதி பெயர் கூறி திட்டுவதாகவும், அடித்து கொடுமை படுத்துவதாகவும் கூறி அவர் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார்.
ஆனால் பாலாஜி இது வரை நித்தியா மீது ஒரு குறை கூட கூறவில்லை. இந்த வழக்கை விசாரித்த போலீசார். பாலாஜி மற்றும் நித்யா ஆகிய இருவருக்கும் புரிதல் இல்லை அதனால் இருவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
