நாய் சேகர் படத்திற்கு பின் ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் கவனம் செலுத்தும் சதீஷ்? போடப்பட்டது அடுத்த பட பூஜை!
ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் வெங்கி இயக்கத்தில் சதிஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.

ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கி இயக்கத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் Trident Arts R.ரவீந்திரன், தயாரிப்பாளர் Seven Screen Studio லலித், தயாரிப்பாளர் Escape Artists மதன், PVR சினிமாஸ் மீனா, டாக்டர் நிஷா, Advocate தமோதர கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அருள்நிதி நடிப்பில் வெளியான தேஜாவு மற்றும் நவீன் சந்திரா நடிப்பில் வெளியான ரிபீட் (தெலுங்கு) வெற்றி படங்களுக்கு பிறகு வைட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் சார்பில் K.விஜய் பாண்டி தயாரிக்கும் படம் இது. பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் வெங்கி என்பது குறிப்பிடத்தக்கது.
"ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் புரொடக்ஷன் No3" என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சதிஷ் கதாநாயகனாக நடிக்கும் சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்கின்றார். உடன் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு யுவா ஒளிப்பதிவை மேற்கொள்ள, VBR இசையமைக்கிறார். சித்தார்த் படத்தொகுப்பு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குனராக பணியாற்றுகினர். இந்த படத்தின் பூஜை இன்று போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Breaking: பிரபல நடிகரின் படப்பிடிப்பில் திடீர் விபத்து! லைட் மேன் உயிரிழந்ததால் பரபரப்பு!
- actor sathish
- actor sathish comedy
- actor sathish comedy scenes
- actor sathish interview
- actor sathish latest
- actor sathish marriage photos
- actor sathish naai sekar
- actor sathish speech
- actor sathish wedding
- comedy actor sathish
- comedy actor sathish about naai sekar
- comedy actor sathish about vadivelu
- comedy actor sathish family photos
- comedy actor sathish new movie
- comedy actor sathish wife
- sathish
- sathish comedy
- sathish comedy scenes