இன்று தமிழ்சினிமாவின் நம்பர் ஒன் காமெடியன் என்றால் அது சத்தியமாக யோகிபாபுதா. விஜயின் ‘சர்கார்’ படத்தில் அவருக்குப் பதிலாக கள்ள ஓட்டுப் போடுபவராக சின்ன வேடத்தில் நடித்தாலும் இணையம் முழுக்க பரபரப்பாகப் பேசப்பட்டவர் யோகிபாபு.

அடுத்த விஜய் படத்திலும் மெயின் காமெடினாக கமிட் ஆகியிருக்கும் யோகி பாபு இன்னொரு பக்கம் அஜீத்தின் விஸ்வாசம்’ படத்திலும் வீடு கட்டி விளையாடிருக்கிறார். அந்த ‘இருவர்’ குறித்தும் யோகி பாபுவிடம் கேட்டபோது...

 “இவங்க ரெண்டுபேருமே எனக்கு ஒண்ணுதான். பிரித்துப்பார்க்கப் பிடிக்கலை. இரண்டு பேர்கிட்டேயும் நிறைய அனுபவங்கள் இருக்கு. நான் ரொம்ப சின்ன நடிகர். ஆனால் இரண்டு பேருமே என்னைப் பக்கத்துல கூப்பிட்டு உட்கார வைத்து அழகு பார்த்தாங்க.

விஜய் சார்கூட நடிக்கிறப்போ, நான் அவரைக் கலாய்த்து ஏதாவது வசனம் பேசினால் அதை மனசார ஏற்றுக்கொண்டு சிரிக்கிறார். ‘விஸ்வாசம்’ படத்துல அஜித் சார்கூட நடிக்கிறப்போ, அவரை கலாய்த்து ஒரு வசனம். பேசுறதுக்கு முன்னாடி அவர்கிட்ட ‘அண்ணே... பேசட்டுமா?’ன்னு தயங்கிக் கேட்டேன்.

அதுக்கு, ‘என்ன யோகி பாபு இப்படிக் கேட்குறீங்க... இது உங்க வேலை. அதுக்குத்தான் உங்களுக்கு சம்பளம் தராங்க. கூசாமப் பேசுங்க’ன்னு சொன்னார். இப்படிப் பேசுனதுலேயே, எனக்கு தயக்கம் போய், தைரியம் வந்துடுச்சு”என்று கூறியுள்ளார்.