Asianet News TamilAsianet News Tamil

சூனாபானா, நாய் சேகர், செட்டப்செல்லப்பா, ஸ்நேக்பாபு, படித்துறை பாண்டிகளுக்கு இன்று 60வது பிறந்தநாள்...

ராஜ்கிரணால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அற்புதமான கலைஞன் வடிவேல்.சிறுசிறு வேடங்களில் நடித்து கொண்டு இருந்தவரை அவரோடசேஷ்டைகள் பிடித்துபோய் கமல் சிங்காரவேலன் படப்பிடிப்பில் அழைத்து முதன்முதலில் ஒரு செக் கொடுத்து அடுத்து ஒரு கிராமத்துப் படம் எடுக்கிறேன். அதில் நீங்க இருக்கீங்கன்னு சொல்லிருக்கார். வடிவேல் மறக்க முடியாத அந்தப்படம் தேவர் மகன். வடிவேல் ஏற்று நடித்த இசக்கி கதாபத்திரம் யாராலும் என்றுமே மறக்க முடியாது.அப்படத்தில்  சிவாஜி, கமலுக்கு இணையாக நடித்திருப்பார்  வடிவேல்.

comedian vadivelu's 60th birthday today
Author
Chennai, First Published Oct 10, 2019, 10:16 AM IST

கைவசம் ஒரு படம் கூட இல்லாவிட்டாலும் இன்றைக்கும் அதிகம் செய்திகளில் அடிபடுகிற நடிகர் வடிவேலுதான். அக்டோபர் 10ம் தேதியான இன்று 59 முடிந்து தனது 60 வது பிறந்தநாளில் அடி எடுத்து வைக்கும் வடிவேலுவுக்கு முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் வாழ்த்துகளும் அவர் குறித்த பதிவுகளும் குவிந்து வருகின்றன.comedian vadivelu's 60th birthday today

அப்பதிவுகளில் ஒன்று,...ராஜ்கிரணால் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட அற்புதமான கலைஞன் வடிவேல்.சிறுசிறு வேடங்களில் நடித்து கொண்டு இருந்தவரை அவரோடசேஷ்டைகள் பிடித்துபோய் கமல் சிங்காரவேலன் படப்பிடிப்பில் அழைத்து முதன்முதலில் ஒரு செக் கொடுத்து அடுத்து ஒரு கிராமத்துப் படம் எடுக்கிறேன். அதில் நீங்க இருக்கீங்கன்னு சொல்லிருக்கார். வடிவேல் மறக்க முடியாத அந்தப்படம் தேவர் மகன். வடிவேல் ஏற்று நடித்த இசக்கி கதாபத்திரம் யாராலும் என்றுமே மறக்க முடியாது.அப்படத்தில்  சிவாஜி, கமலுக்கு இணையாக நடித்திருப்பார் நம் வடிவேல்.

வடிவேல் நகைச்சுவையில் தனக்குன்னு ஸ்டைலை உருவாக்க ஆரம்பித்தார். வி.சேகர். டி.பி கஜேந்திரன், ராம.நாரயணன்,சுந்தர்.சி போன்ற இயக்குனர்கள் படங்களில் மிகவும் ஜொலிக்க ஆரம்பித்தார். அவர் ஏற்ற அத்தனை கதாபத்திரத்துக்கும் உயிர் கொடுத்து இருப்பார். நல்ல நடிகனுக்கு உடல்மொழி மிகவும் முக்கியம். வடிவேல் போல உடல்மொழியில் வேறுபாடு காட்டும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஒரு சிலரே. வடிவேலுக்கு நகைச்சுவை மட்டுமில்லாமால் குணசித்திரமாகவும் நடிப்பார். வடிவேலால் நம்மை சிரிக்க வைக்கவும் முடியும், அழ வைக்கவும் முடியும். அதுதான் வடிவேல்.comedian vadivelu's 60th birthday today

’வண்ணத்தமிழ் பாட்டு’ என்கிற படத்தில் வடிவேலுக்கு தூக்கத்தில் நடக்கிற வியாதி, தூக்கத்தில் நடந்து போய் பாத்ரூமுக்கு போய்
தூங்கி விடுவார். அங்கே ஆனந்தராஜ் குளித்து கொண்டு இருப்பார்.அதை பார்த்து வடிவேல் பயந்து விடுவார். அப்போ பூசாரி எதை பார்த்து பயந்தேன்னு கேட்கும்போது வடிவேல் கொடுக்கும் பாவனைகள், அத்தனையும் அட்டகாசமாய் இருக்கும், ஆனந்த்ராஜ் வந்து அவன் என் துப்பாக்கிக்கு மட்டும் தான் பயப்புடுவான்னு வேட்டியை தூக்கும்போது வடிவேல் ரியாக்ஷன் பார்க்கணும். இதை எழுதும்போது கூட சிரித்துகிட்டே தான் எழுதுறேன். வடிவேலுக்காக ஓடிய படங்கள்ன்னு தனி லிஸ்ட்டே இருக்கு, வின்னர் எல்லாம் சென்னையில் 75 நாட்கள் ஓடியது வடிவேலுக்காக மட்டுமே. வடிவேல் 1991ம் வருடத்தில் இருந்து சினிமாவில் இருந்தாலும் அவர் பீக்குக்கு வந்தது 2000ம் வருடம். 2000 டூ 2011. அவரை அடித்து கொள்ள ஆளே இல்லை. ரஜினி சந்திரமுகி படம் ஆரம்பிக்கும்போது முதலில் வடிவேல் கால்ஷீட் வாங்கிட்டு அப்புறம் என்கிட்டே வாங்கன்னு சொன்னது எல்லாம் வரலாறு.

ஆரண்யகாண்டம் இயக்குனரிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் வடிவேல்.  நலன் குமாரசாமி வடிவேலுக்கு ஒரு கதை செய்து இருக்கிறார் எப்படியாவது அந்த ப்ரொஜெக்ட் வடிவேல் காதுக்கு சென்று இவர்கள் இருவரும் இணைய வேண்டும். இப்போது இருக்கும் இளம் இயக்குனர்கள் வடிவேலுவை வைத்து வேற Flavourல் படம் எடுக்க வேண்டும். வடிவேல் என்னும் மாபெரும் கலைஞன் மீண்டும் மக்களை மகிழ்விக்க வேண்டும். இப்போது வெளியாகும் எந்த புதுபட போஸ்டரையும் வடிவேலுவின் பழைய படங்களில் இருந்து எடுத்து வடிவேல் வெர்சன் போட்டு கலாய்த்து விடலாம். வடிவேலு இல்லையென்றால் பாதி பேருக்கு மீம் போட கூட வராது என்பது தான் நிஜம். சூப்பர் டீலக்ஸ் போஸ்டரை அப்படத்தின் இயக்குனர் தியாகராஜா குமாரராஜாவே வடிவேல் படங்களை போட்டு வெளியிட்டது கவனிக்கதக்கது.comedian vadivelu's 60th birthday today

பாக்ஸர் கிருஷ்ணன்,சூனா பானா,டெலக்ஸ் பாண்டியன், செட்டப் செல்லப்பா,அங்குசாமி,ஸ்டீவ் வாக்,கட்டபொம்மு,கைப்புள்ள, கல்யாண சுந்தரம் (கல்யாணம் ஆகல), புல்லட் பாண்டி, வீரபாகு,வெடிமுத்து,அய்யாசாமி,தீப்பொறி திருமுகம்,கிரிகாலன் ( வெல்கம் டூ கிரிகாலன் மேஜிக் ஷோ) பாடி சோடா,படித்துறை பாண்டி, திகில் பாண்டி,கபாலி கான், ஸ்நேக் பாபு, என்கவுண்டர் ஏகம்பாரம்,வண்டு முருகன்,அலார்ட் ஆறுமுகம்,பானர்ஜி,ஸ்டைல் பாண்டி,காண்ட்ராக்டர் நேசமணி இந்த பெயர்களை நீங்கள் படிக்கும்போதே அதில் உள்ள நகைச்சுவை காட்சி உங்கள் நினைவுக்கு வரும்.வடிவேல் நமக்குள் கலந்த ஒரு கலைஞன்.ஹாப்பி பர்த்டே வடிவேல் லவ் யூ.
முகநூலில்,...சரத்பாபு.

Follow Us:
Download App:
  • android
  • ios