சிலருடைய பிரமாதமான நடிப்பைக் கண்டு ‘கொன்னுட்டாண்டா’ என்று கமெண்ட் அடிப்போம் அல்லவா? அப்படி ஒரு தரமான நடிப்பை வழங்கிக்கொண்டிருந்தபோதே மயங்கி சரிந்து விழுந்து இறந்திருக்கிறார் இந்திய வம்சாவளி மேடை நடிகர் ஒருவர்.

துபாயில் வசித்துவந்தவர்மஞ்சுநாத் நாயுடு (36). இந்தியவம்சாவளியை சேர்ந்தவரான இவர், மேடையில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இவரது காமெடி நிகழ்ச்சிக்கு துபாய் முழுக்கவே ஏராளமான ரசிகர்கள் உண்டு.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை துபாயில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். ஏராளமான பார்வையாளர்கள் கூடியிருந்தனர். அவர்கள் முன் சிரிக்க சிரிக்கப் பேசிக் கொண்டிருந்தார் மஞ்சுநாத். பார்வையாளர்களும் சிரித்தனர். அடுத்து தனது அப்பா, அம்மாவை பற்றி பேசிக்கொண்டிருந்த அவர், பதட்டம் காரணமாக, எந்த மாதிரியான பாதிப்புகளை சந்தித்தேன் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது, திடீரென மயங்கி விழுந்தார். இது, நிகழ்ச்சியின் ஒரு பகுதி என பார்வையாளர்கள் நினைத்ததால் சிரித்துக் கொண்டிருந்தனர். ஆனால், தொடர்ந்து விழுந்தே கிடந்ததால், அவரை அங்கிருந்த சிலர் சென்று தூக்கினர். அப்போது அவர் நிஜமாகவே மயங்கி இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்துநிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அவரை அவசரமாக  மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.ஸ்டாண்ட் அப் காமெடியன் ஒருவர் மேடையிலேயே மரணமடைந்தது துபாயில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.