’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் லேட்டஸ்ட் சர்ச்சையான மதுமிதாவின் தற்கொலை முயற்சி குறித்து காவல்துறை விசாரணை தேவை என்று முன்னாள் காமெடி நடிகர் எஸ்.வி.சேகர் ட்விட் செய்திருப்பது பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மதுமிதா வெளியேறியிருக்கிறார். தமிழச்சி என்று ஆரம்பத்தில் அதிரடி காட்டிய மதுமிதா, பிறகு ஆன்மீகத்தில் ஈடுபட்டு அமைதியாக இருந்தாலும், வனிதாவுக்கு ஈடுகொடுத்ததால் ரசிகர்களைக் கவர்ந்தார்.இந்த வாரம் அபிராமி தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போகிறார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்த நிலையில், மதுமிதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

கையை அறுத்துக் கொண்டு தற்கொலை முயன்றதாலேயே அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.மதுமிதா இப்படி கையை அறுத்துக் கொண்டதற்கு காரணம், கவின், மதுமிதாவிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, ஷெரீனுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். “தமிழச்சி என்று சொல்லிக் கொள்கின்ற நீயே தமிழ்நாட்டிற்கு உயிரைக் கொடு” என்று கூறியதோடு சில கெட்ட வார்த்தைகளாலும் மதுமிதாவைத் திட்டியதாகக் கூறப்படுகிறது.இதனால், மனமுடைந்த மதுமிதா அருகில் இருந்த கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த கவின், எதுவும் நடக்காதது போல் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது தவறு என கூறி அவரை வெளியே அனுப்பியவர்களுக்கு, மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர் யார் என கண்டுபிடித்து வெளியே அனுப்ப முடியாதா? ஏன் 60 காமிரால சில வேலை செய்யவில்லையா. இது விளையாட்டுத்தான் என்றாலும் போலீஸ் விசாரணை தேவை.ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எதிராக எஸ்.வி.சேகர் காவல்துறை விசாரணை கோரியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் கருத்து சொல்லி வருகிறார்கள்.

எஸ்.வி.சேகரின் இந்த கமெண்டுக்கு பதிலளித்திருக்கும் பலரும் அப்பல்லோவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எந்தக் கேமராவும் வேலை செய்யவில்லையே அதற்கான விசாரனையை முதலில் கோர வேண்டியதுதானே என்று பதிலளித்து வருகிறார்கள்.