ஜெயம் ரவி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் கோமாளி. இதில் காஜல் அகர்வாலுடன் மற்றொரு ஹீரோயினாக நடித்தவர் சம்யுக்தா. ஒரே படத்தின் மூலம்  தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சம்யுக்தா, பப்பி, வாட்ச்மேன் ஆகிய படங்களில் நடித்தார். கொரோனா லாக்டவுன் காலத்தில் ஷூட்டிங் இல்லாததால் பெங்களூருவில் பெற்றோருடன் வசித்து வரும் சம்யுக்தா, சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் இவர் இன்ஸ்டாகிராமில் தனது ஹாட் போட்டோஸையும், வியர்க்க விறுவிறுக்க செய்யும் ஒர்க் அவுட் வீடியோக்களையும் பதிவேற்றி வருகிறார்.

 

இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் 4 ஒளிபரப்பு எப்போது ஆரம்பம்?... வெளியானது அசத்தலான தகவல்...!

வீட்டிற்குள் எவ்வித மேக்கப்பும் இல்லாமல், டூபிஸ் உடையில் செம்ம ஆட்டம் போடும் வீடியோக்களையும், வளையத்தை வைத்து விதவிதமாக வித்தை காட்டும் வீடியோக்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அப்படி அவர் பயிற்சி செய்வதற்காக தனது 2 தோழிகளுடன் பெங்களூருவில் உள்ள பார்க் ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு ஸ்போர்ட்ஸ் பிராவுடன் சம்யுக்தா பயிற்சியை ஆரம்பித்ததை பார்த்த வயதான பெண்மணி ஒருவர், நீங்கள் என்ன கேப்ரே டான்சர்களா? என்ன உடை இது என திட்ட ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த ஆண்களும் அவர்களுக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளனர். 

 

இதையும் படிங்க:  “மக்கள் திலகத்தின் மறு உருவமே”... மீண்டும் எம்.ஜி.ஆர். கெட்டப்பில் விஜய்... சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்...!

சூழ்நிலையின் தீவிரத்தை புரிந்து கொண்ட சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அங்கு நடப்பவற்றை நேரலை செய்ய ஆரம்பித்தார். அதில் நான் வளையங்களை வைத்து பயிற்சி மேற்கொள்ள வந்தேன். வயதான பெண்மணி உள்ளிட்ட சிலர் எங்களை வெளியே போங்க. இது என்ன ஆபாசமான உடை என திட்டினர். என் தோழியையும் அந்த பெண்மணி தாக்கினார் என பேசிக்கொண்டிருந்த சம்யுக்தா, உடனடியாக தனது மேலாடையை கழட்டி, பாருங்கள் இது ஸ்போர்ட்ஸ் பிரா, ஸ்போர்ட்ஸ் டிராக் உடன் தான் பயிற்சி செய்தேன். இதில் என்ன தப்பு என கேட்கிறார்.  இந்த பிரச்சனையை தீர்க்க போலீசாரும் அங்கு வந்துள்ளனர். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோ குறித்து சம்யுக்தாவிற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ...