collage student aganst vijay 62 movie

விஜய்62

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மெர்சல்.இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
இந்நிலையில் தற்போது விஜய் 62 வது படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.படக்குழுவினர் வெளி மாநிலம்,வெளிநாடு என மாறி மாறி படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி

இந்த நிலையில் இந்த படத்தின் சேஸிங் காட்சி ஒன்று சென்னை பச்சையப்பா கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீரென மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இடையூறு

விஜய் படத்தின் படப்பிடிப்பு நடத்த கல்லூரி முதல்வர் அனுமதி அளித்த போதிலும் மாணவர்களின் படிப்பிற்கு படக்குழுவினர் இடையூறு ஏற்படுத்துவதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து கல்லூரி முதல்வரிடம் படக்குழுவினர் அமைதியாக படப்பிடிப்பு நடத்துவதாக உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

அஜித் ரசிகர்கள்

மேலும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அஜித் ரசிகர்கள் என்பதால் இந்த போராட்டம் நடந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.