நடிகர் சீயான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்காக டிசைன் செய்யப்பட்ட காமன் டிபி ஒன்றை, ரசிகர்களுக்காக பிரபல இயக்குனர் அஜய் ஞானமுத்து நேற்று மாலை  வெளியிட்ட நிலையில், தற்போது விக்ரம் சற்றும் எதிர்பாராத பரிசு ஒன்றை கொடுத்து வசதியுள்ளது 'கோப்ரா' படக்குழு. 

நடிகர் விக்ரம், சேது படத்தின் வெற்றிக்கு பிறகு,  தேர்வு செய்து  நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், தற்போது இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், 'கோப்ரா' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்ரம் மொத்தம் 7 விதமான கெட்டப்புகளில் நடித்து அசத்தியுள்ளார். 

ஏற்கனவே விக்ரம்  7 கெட்டப்பில் தோன்றியிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேப்பை பெற்றது.

இந்நிலையில், 'கோப்ரா' படத்தின் இயக்குனர் நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு, விக்ரமின் அணைத்து கதாப்பாத்திரங்களையும் ஒரு சேர உருவாக்கிய புதிய, காமன் டிபி ஒன்றை ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளார்.

இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் அணைத்து விக்ரமின் கெட்டப்புகளையும் ஒரே போஸ்டரின் கொண்டு வந்து கண் முன் நிறுத்தி அஜய் ஞானமுத்து சும்மா மிரட்டியுள்ளார் என அவருடைய ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வந்தனர்.

இந்நிலையில், இந்த படத்தில் நடித்துள்ள அணைத்து நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து விக்ரம் பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் வீடியோ ஒரே வெளியிட்டு, நடிகர் விக்ரமுக்கு சர்பிரைஸ் கொடுத்துள்ளனர் கோப்ரா பட குழுவினர்.  

'கோப்ரா' படத்தை, வைகாம் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்து வருகிறது. KGF
பட நடிகை ஸ்ரீநிதி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் ரஷ்யாவில், நடந்து வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எனவே கொரோனா தொற்று குறித்த பரபரப்பு அனைத்தும் முடிவடைந்த பிறகே இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடரும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான, 'பொன்னியின் செல்வன்' படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கோப்ரா படம் வெளியிட்டுள்ள, அந்த வீடியோ இதோ...