தமிழ் திரையுலகின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் பல வெற்றிப்படங்களை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஐசரி கணேஷ் பல ஆண்டுகளாக தரமான படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இந்நிறுவனம் தயாரித்த எல்.கே.ஜி., கோமாளி, பப்பி ஆகிய படங்கள் அனைவரது வரவேற்பையும் பெற்றது. எனவே இந்த 3 படங்களுக்கும் நேற்று ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வெற்றி விழா நடைபெற்றது. 

திரைப்பட விழாவில் முதன் முறையாக பங்கேற்ற முதலமைச்சர் பழனிசாமி, 3 படங்களில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த், ஆர்.ஜே.பாலாஜி, கே.பாக்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், கவுதம் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் சீறு, சுமோ படங்களின் டிரைலரும், ஜோஸ்வா படத்தின் டீசரும் ஒளிபரப்பட்டது. 

ஏராளமானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் ப்ரியா ஆனந்த் அதிக கவனம் ஈர்த்தார். பிங்க் நிற பட்டுப்புடவையில் சேலை கட்டிய தென்றலாக காட்சியளித்த ப்ரியா ஆனந்த் இளைஞர்களை சொக்கவைத்தார். சிம்பிள் அண்ட் க்யூட்டாக வந்த பிங்க் நிற பட்டுப்புடவையில் வந்த ப்ரியா ஆனந்த்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

அதே புடவையில் வளைத்து, வளைத்து போஸ் கொடுத்து போட்டோ ஷூட் ஒன்றையும் ப்ரியா ஆனந்த் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களைப் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள், "பொண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்" என வர்ணித்து வருகின்றனர்.