அதிமுக மட்டுமல்லாது ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் மிகவும் பரபரப்பை கிளப்பிக்கொண்டிருந்த விவகாரம், அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான். இதுகுறித்து சமீபத்தில் நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் கூட இந்த பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது. 

​கடந்த 7ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் இருவரும் கூட்டாக செய்தியாளரைச் சந்தித்தனர். அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் கட்சிக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்று மாலையே கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கு சென்ற எடப்பாடியார், மலர்க்கொத்து கொடுத்து நன்றி தெரிவித்தார். 

 

இதையும் படிங்க: விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நட்சத்திர தம்பதி... தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பை அடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் உட்பட பல தரப்பிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்தது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறியுள்ளார். அதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.