’விஸ்வாசம்’ ‘பேட்ட’ படத்தோடு ஒப்பிடும்போது தோல்விப்படம்தான். ஆனால் அதை சாமர்த்தியமாக மறைப்பதற்காக, வலைதள புரமோட்டர்கள் மூலம் சதிவேலைகளில் ஈடுபடுகிறார்கள் அஜீத்தும் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவும் என்று குற்றம் சாட்டத்துவங்கியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

’விஸ்வாசம்’ படம் இரண்டாவது நாளே டல்லடிக்கத்துவங்கியதால், பேட்ட படத்துக்கு அதிக ஷோக்கள் மற்றும் தியேட்டர்கள் ஒத்துக்கப்படுவதாக க்யூப் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் ரஜினிகாந்தின் பிஆர்ஓ ரியாஸ் அகமது.

இதனை பார்த்து கடுப்பான விஸ்வாசம் வினியோகஸ்தரும், நயன்தாராவின் மானேஜருமான கொட்டபாடி ராஜேஷ், ரியாஸை கண்டிப்பது போல ஒரு ட்வீட் போட்டார். விஸ்வாசம் படத்துக்கு தியேட்டர்கள் குறைக்கப்பட்டதாக க்யூப் நிறுவனமே அறிவித்த பிறகும், அந்த பட விநியோகஸ்தர் ‘அதெல்லாம் கிடையாது… பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷன் பாருங்க’ என சமாளித்திருந்தார்.

உடனே அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் மோசமான வார்த்தைகளில் கமெண்ட் போட்டிருந்தனர். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் ரஜினி பிஆர்ஓவுக்கு செருப்படி பதில் என்றெல்லாம் வீடியோவே வெளியிட்டனர்.ரஜினிக்கு தமிழகத்தில் ஆதரவு குறைந்து விட்டது என்ற பிம்பத்தை உருவாக்க திரையுலகை சார்ந்த சிலரே முன்னின்று செய்யும் சதி இது என்று முன்னணி விநியோகஸ்தர்கள், பேட்ட படத்தை வெளியிட்டு வசூலை அள்ளிக்கொண்டிருக்கும் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

இன்னொரு பக்கம் வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்ப அஜீத்தும், அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவும் தலைக்கு ரூ.20 ஆயிரம் வீதம் பல லட்சங்களை அள்ளி வீசுவதாகவும் செய்திகள் தீப்பிடிக்கின்றன. நிஜமான உண்மை வெளியே வரவேண்டுமானால் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் தியேட்டர் உரிமையாளர்களும் மனசு வைத்தால்தான் உண்டு.