சின்னத்திரை “தெய்வமகள்” நாடகத்தில் வில்லியாக வரும் காயத்ரிக்கு பேனர், கட் அவுட் வைத்து ரசிகர் மன்றம் தொடங்கி அலறவிட்டுள்ளனர் ரசிகர்கள்.

பிரபல தொலைக்காட்சியில், சனிக்கிழமை கூட நம்மை வேறு எந்த தொலைக்காட்சிப் பக்கமும் போகவிடாமல் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியல் தற்போது நல்லா ஓடிக்கொண்டிருக்கிறது.

சீரியலோட கதைக்குள் நாம் செல்ல வேண்டாம். அப்படி போனால், அந்த சீரியல் ஊரு சமூக சீர்கேடு என்பதை சொல்ல வேண்டி இருக்கும். பொதுவாக 99.9 சதவீத தொலைக்காட்சி சீரியல்கள் சமூக சீர்கேட்டை தான் உண்டாக்குகிறது. அதான் அதுக்குள்ள போக வேண்டாம்.

இதில், வில்லியாக நடிக்கும் காயத்ரிக்கு தற்போது ரசிகர் பட்டாளம் அதிகரித்து வருகின்றனர். காய்த்ரிக்கு பிளெக்ஸ் வைப்பது, பேனர்கள் வைப்பது என்று அட்டூழியம் செய்து வருகின்றனர்.

தெய்வமகள் சீரியலில் ஜெய்ஹிந்த் விலாஸின் மூத்த மருமகள் காயத்ரி. இவரின் கிரிமினலான வில்லத்தனத்தால் அட்ராக்ட் ஆகி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வருகிறது. அவரது புகைப்படங்களை பதிவிட்டு பாராட்டு மழை பொலிந்து வருகின்றனர். அதோடு அல்லாமல், அண்ணியாரின் விழுதுகள் என்று போட்டு காயத்ரி நற்பனி மன்றம் சார்பில் பேனர் வைத்துள்ளனர் இந்த ரசிகர்கள்.

சினிமா நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பேனர்கள் வைத்த காலம் போய், தற்போது டிவி நடிகைகளுக்கும் பேனர் வைத்து சமூக அக்கறையை காட்டியுள்ளனர் இந்த ரசிகர்கள்.