உலக அளவில் வளர்ந்த நாடுகளையே அச்சத்தில் உறைய வைத்துள்ளது கொரோனா தொற்று. இதன் மூலம் நாளுக்கு நாள், பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இந்த சூழலை எப்படி சமாளிப்பது என திணறி வருகிறார்கள் ஸ்பெயின், இத்தாலி, அமெரிக்கா போன்ற நாட்டை சேர்ந்த தலைவர்கள்.

கொரோனா வைரஸ் ஏற்கனவே பல ஹாலிவுட் பிரபலங்களை பலி வாங்கியுள்ள நிலையில், தற்போது... மேலும் ஒரு திறமையான பிரபலத்தின் உயிரை பறித்துள்ளது பிரபலங்களையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் 5 முறை ஆஸ்க்கார் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்ட, பிரபல ஒளிப்பதிவாளர் Allen Daviau கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

77 வயதாகும் இவர், “The Color Purple,”  “Empire of the Sun,” and “E.T. the Extraterrestrial” போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி, பல விருதுகளை வாங்கி குவித்தவர். குறிப்பாக 5 முறை ஆஸ்க்கார் விருதுக்கு பறித்துரைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய மறைவு, ஹாலிவுட் ரசிகர்களையும் பிரபலங்களையும்  பெரிதளவு பாதித்துள்ளது. தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த கொடூர நோயினால் பல பிரபலங்களும், கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலரது இறப்பு செய்திகள் ரசிகர்களின் மனதை உலுக்கி விடுகிறது. அப்படி ஒரு செய்தி தான் இது. புகழ்பெற்ற ஹாலிவுட் ஒளிப்பதிவாளரான Allen Daviau முன்பு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் 5 முறை ஆஸ்கர் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டவர். E.T, The Color Purple, Empire of the Sun போன்ற பல வெற்றி படங்களில் பணியாற்றியுள்ளார். இவருக்கு வயது 77. இந்நிலையில் அவர் கொரோனாவால் மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த துக்கத்தில் உள்ளனர். பல சாதனைகளை செய்த ஒரு கலைஞனுக்கு இயற்கை தரும் நியதி இதுதானா?