'சண்டக்கோழி2’ படம் குறித்த செய்திகளில் தனக்கும் படத்துக்கும் முக்கியத்துவம் தராமல் ஹீரோ விஷாலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதால் சினிமா பத்திரிகையாளர்களைக் கண்டாலே எரிச்சல்தான் வருகிறது’ என்று புலம்பிக்கொடிருக்கிறார் இயக்குநர் லிங்குசாமி.

இரு தினங்களுக்கு பிரசாத் லேப்பில் ‘சண்டக்கோழி2’ தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாட் செய்திருந்தார் இயக்குநர் லிங்குசாமி. இந்நிகழ்ச்சிக்கு லிங்கு, வரலட்சுமி உட்பட படக்குழுவினர் வந்து காத்திருக்க சுமார் 2 மணி நேரம் தாமதமாக வந்துசேர்ந்தார் நடிகர் விஷால்.

 

இதனால் எரிச்சலடைந்த பத்திரிகையாளர்கள் ‘சண்டக்கோழி’ சம்பந்தமான கேள்விகளில் ஆர்வம் காட்டாமல் வீம்புக்கு விஷாலிடம் அரசியல் கேள்விகள் மட்டுமே கேட்டு இயக்குநர் லிங்குவை வெறுப்பேற்றினர். நிகழ்ச்சி முடிந்ததும் தனது பட பி.ஆர்.ஓ.வை தனியாக அழைத்த லிங்குசாமி,

‘வர வர இந்த சினிமா ரிப்போர்ட்டர்களைப் பாத்தாலே பத்திக்கிட்டு வருது. பட புரமோஷனுக்கு பிரஸ்மீட் வச்சா விஷால் புராணத்தை மட்டுமே பாடுறாங்க’ என்று அவரைக் காய்ச்சி எடுத்தார்.