cinematic opportunity for love
கடந்த ஒரு வாரமாக காதல் படத்தில் நடித்த 'விருச்சககாந்த்' சென்னையில் சூளையில் அமைத்துள்ள கோவிலில் மனநலம் பாதித்தவர் போல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். காதல் படத்தில் பிரபலமான இவரை திரையுலகம் கண்டு கொள்ளுமா என பல்வேறு செய்திகள் வெளியானது.
இந்நிலையில் சென்னையில் நடந்த 'வேகத்தடை ' குறும்பட நிகழ்ச்சி திரையிடலுக்கு சிறப்பு விருந்தினராக வந்த அபி சரவணன் கூடவே நடிகர் 'விருச்சககாந்த்தையும் அழைத்து வந்து அவருக்கு தேவையான சில உதவிகளை செய்தார்.
அதே போல் நேற்று நடைபெற்ற 'உறுதிகொள்' ஆடியோ வெளியீட்டு விழாவிலும் விருச்சககாந்த்துக்கு காசோலையை அளித்தார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அபி சரவணன், விருச்சக காந்தை மீட்டதற்காக சாய் தீனா மற்றும் மோகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக தெரிவித்தார்.
மேலும் அடுத்த வாரமே தொடங்க இருக்கும் எனது புதுப்படமான "சூறாவளி"யின் இயக்குனர் குமார்நந்தாவும் தன படத்தில் 'விருச்சக காந்த்' நடிக்க வாய்ப்பு வழங்கியுள்ளதாகவும், மன்சூரலிகான் அடுத்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.
