கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால், பல விதத்தில் பொது மக்கள் மட்டும் இல்லாமல் பல தொழில் துறை நிறுவனங்களும் முடங்கி போய் உள்ளது.

அந்த வகையில் கோடம்பாக்கத்தில் உள்ள அனைத்து படப்பிடிப்புகளும் இன்று ஒத்திவைக்க பட்டுள்ளதால், பட பிடிப்பு தளங்கள் வெரிச்சோடி காணப்படுகிறது.

இன்று படப்பிடிப்பு நடத்தினால் 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் யாரும் வாங்க மாட்டார்கள் என்கிற நோக்கத்திலோ... என்னவோ... இன்று நடைபெறுவதாக இருந்த அனைத்து படப்பிடிப்புகளும் ஒத்திவைக்க பட்டுள்ளது.

500, 1000 என பல லட்சங்களை கையில் வைத்து கொண்டு சுற்றும் பல தயாரிப்பாளர்களும் இன்று 100 ரூபாய் நோட்டை தேடி சுற்றி வருவதாக சொல்ல படுகிறது.

இதுக்குத்தான் யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும் என சொல்லவர்களோ.....!!!