Cinema Halls In Tamil Nadu Will Be Closed From Diwali Announce Strike Against New Tax

மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் அதை கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். உலகம் முழுவதும் நூற்றுகணக்கான தியேட்டர்களில் மெர்சல் ரிலீஸ் ஆகிறது, தற்போது பாரிஸில் உள்ள Grand Rex திரையரங்கில் இந்த படம் வெளியாகவுள்ளது.

ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையரங்கம் இது என்பதால் தான் அது. ஒரே நேரத்தில் 2800 பேர் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு பெரிய Grand Rex திரையரங்கில் அக்டோபர் 18ம் தேதி மெர்சல் வெளியாகவுள்ளது. 

விஜய் ரசிகர்களுக்கு இந்த சந்தோஷம் ஒருபுறமிருக்க, உலக தமிழர்கள் அனைவரும் மிகவும் இந்த தீபாவளிக்கு எதிர்பார்க்கும் இந்த படத்துக்கு தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. கேளிக்கை வரி சதவீதம் அதிகம் செய்த இந்த தமிழக அரசை கண்டித்து இந்த போராட்டம் திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

கேளிக்கை வரி விவகாரம் ஏற்கனவே கொழுந்து விட்டு எறியும் நிலையில், சென்னையில் உள்ள மல்டி ப்ளக்ஸ் அதாவது ஐநாக்ஸ் மற்றும் பி.வி.ஆர் நேற்று நள்ளிரவு முதல் மூடிவிட்டார்கள். மேலும் தீபாவளி முதல் திரையரங்குகள் மூடபோவதாக திரையரங்க உரிமையாளர்கள் முடிவு எடுத்துள்ளது. 

இந்த சூழ்நிலையில் இன்று தமிழக ஒருகிணைந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதனால் விஜய் நடிக்கும் மெர்சல் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.