தமிழ் சினிமாவில், பல படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருபவரும், கோபுரம் பிலிம்ஸ் சார்பில், மருது, தங்கமகன், வெள்ளைக்கார துறை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவருமான தயாரிப்பாளர் அன்புச்செழியன். இவர் வரி ஏய்ப்பு புகாரில் ஈடுபட்டதாக கூறி வருமான வரி துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

முதல் கட்டமாக அவருக்கு சொந்தமாக தி.நகரில் உள்ள அவருடைய வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே இன்று காலை, ஏ.ஜி.எஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது அன்பு செழியன் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.