6 ஆண்டுகள் நான்கே படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக மாறியிருக்கும் பா. ரஞ்சித் பாலிவுட்டில் கால் தடம் பதிக்க இருக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான Namah Pictures தயாரிக்கும்  படத்தை ரஞ்சித் இயக்கவுள்ளார். இது பழங்குடியினரின் சுதந்திரத்திற்காக போராடிய பிர்சா முன்டாவின் வாழ்க்கை கதையைக் கொண்டு உருவாகும் இந்த மெகா பட்ஜெட் படத்தை இயக்குகிறார். தமிழில் அவர் தயாரிக்கும் படத்தில்  ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ளார்.

தல அஜித்தின் விஸ்வாசம், சமீபத்தில் அஜித்தின் பிறந்த நாளான மே 1 அன்று சன் டிவியில் இப்படம் ஒளிபரப்பானது. இந்த படம் TRP-யில் மிக பெரிய சாதனை படைத்து இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. ஏற்கனவே முதல் மூன்று இடங்களில் இருந்த பிச்சைக்காரன், சீமராஜா, சர்கார் உள்ளிட்ட படங்களில் சாதனையை முறியடித்தது. இதனை ரசிகர்கள் பல ஹேஸ்டேக்குகள் மூலமாக கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

கடந்த மாதம் விஷாலுக்கும் அனிகாவுக்குமான நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், வரும் அக்டோபர் 9-ம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தன்னுடைய திருமணம் புதிய நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடைபெறும் எனவும் கூறியிருந்த நிலையில், சென்னையில் எங்கு நடைபெறும் எனது தெரிகிறது ஆனால் அது நடிகர் சங்க கட்டிடமா என்ற விவரங்கள் வெளியாகவில்லை.

பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மிக பிரமாண்ட மாக உருவாகிவரும் இந்த படத்தில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளாராம்.