தளபதி இது நியாயமா? நீங்க இப்படி பண்ணலாமா?

கடந்த சில நாட்களாக தமிழ் சினிமா முடங்கியது பல பிரச்சனைகளை முன் நிறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. தயாரிப்பாளர் சங்கம் சில முடிவுகளுக்காக முழு ஸ்ட்ரைக் அறிவித்துள்ளனர். ஆனால் விஜய் 62வது படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது. இந்த தகவலை அறிந்த மற்ற பிரபலங்கள் அது என்ன அவர்களது படத்துக்கு மட்டும் அனுமதி கொடுப்பது? என சமூக வலைதளங்களில் கொந்தளிக்கின்றனர்.

நேற்று விஜய் படப்பிடிப்பை தாக்கி நடிகர் கருணாகரன் டுவிட் போட்டிருந்தார். அதேபோல நடிகர் சித்தார்த் டுவிட்டரில், ஒவ்வொரு படங்களும் எல்லோருக்கும் முக்கியம் தான். ஒருவருக்கு ஸ்பெஷல் அனுமதி கொடுத்தால் மற்றவர்களுக்கு தர வேண்டும். எல்லோருமே இங்கு ஒன்றுதான் என பதிவு செய்துள்ளார்.

புருவப் புயலை ரிஜெக்ட் பண்ண கே.வி....

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த வருட இறுதியில் தொடங்க உள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க புருவப் புயல் ப்ரியா பிரகாஷ் வாரியருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் தற்போது இது குறித்து கே.வி.ஆனந்த் கூறியிருப்பதாவது, நாங்கள் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க ப்ரியா வாரியரை நாங்க அணுகவே இல்லை. இந்த படத்தில் பெரிய பேமஸான ஹீரோயினை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

சிம்பு மீது எனக்கு எப்போதும் சீக்ரெட் க்ரிஷ் இருக்கும்!

சிம்புவுக்கு அஜித் விஜய்க்கு இணையாக ரசிகர்கள் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விசியம். இவருக்கும் திரையுலக பிரபலங்கள் பலர் ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்து வரும் சரண்யா அளித்த பேட்டியில் சிம்பு தான் மாஸ். வினை தாண்டி வருவாயா படத்தில் மேலும் மேலும் உருகி உருகி என்ற பாடலை பார்க்கும் போது இப்படியொரு காதலன் நமக்கும் கிடைக்க மாட்டாரா? என பல பெண்கள் ஏங்கி இருக்கிறார்கள்.

சிம்பு மீது எனக்கு எப்போதும் சீக்ரெட் க்ரிஷ் இருக்கும். அவருக்கு தற்போது படங்களை தேர்வு செய்ய தெரியவில்லையா? அல்லது அவரது கெட்ட நேரமா? என தெரியவில்லை எனவும் பேசியுள்ளார்.