Asianet News Tamil

தல’க்காக காத்திருக்கும் ஷங்கர்! ஷாக் கொடுத்த தளபதி... ஒல்லி குச்சி உடம்புக்காரியான குட்டி குஷ்பு... திரும்பி வந்த சியான் சன்! 

cinema bit news about Ajith vijay and hansika
cinema bit news about Ajith vijay and hansika
Author
First Published Mar 10, 2018, 2:30 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


தெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகி இன்னமும் தேர்வாகவில்லை. பாலா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நேபாளத்தில் துவங்கியது. மகனின் முதல் படப்பிடிப்பை காண்பதற்காக விக்ரமும் படக்குழுவினருடன் நேபாளம் சென்றார்.

 
அங்கு அவர் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டார். ‘வர்மா’ படப்பிடிப்பு நேபாள தலைநகர் காத்மண்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருந்த நிலையில், படக்குழு தற்போது சென்னை விரைந்துள்ளது. மீண்டும் சென்னை திரும்புவதாக படத்தின் நாயகன் துருவ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதிலிருந்து நேபாளத்தில் நடத்தப்பட்டு வந்த முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தெரிகிறது..

ஒல்லி குச்சி உடம்புக்காரியான குட்டி குஷ்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் ஹன்ஷிகா. தற்போது வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ஹன்ஷிகா தற்போது தன்னுடைய உடல் எடையை அதிகமாக குறைத்துள்ளார். ஏற்கனவே இவர் எடையை குறைத்து இருந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய எடையை குறைத்து ஒல்லியாக இளைத்துள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் குண்டாக இருந்தால் தான் அழகு. ஏன் இப்படி ஆகிட்டிங்க என புலம்பி வருகின்றனர்.

தல அஜித்க்காக காத்திருக்கும் ரோபோ ஷங்கர்!

அஜித்-சிவா கூட்டணியில் வெளியான விவேகம் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத் தராமல் ஏமாற்றத்தைத் தந்ததால் மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகவுள்ள விஸ்வாசம் தம்பி ராமையா, யோகிபாபு ஆகியோர் நகைச்சுவைக் கலைஞர்களாக ஒப்பந்தமானார்கள். இந்த நிலையில் ரோபோ சங்கரும் தற்போது இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளார்.

படம் முழுக்க அஜித் கூடவே வரும் கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்கிறார். இதற்காக கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு மார்ச் 22ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ஃபிலிம் சிட்டியில் தொடங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

அஜித்துடன் முதன்முறையாக இணைந்தது குறித்து ரோபோ சங்கர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். “இதுவரைக்கும் நான் அஜித்தை நேரில் பார்த்ததில்லை. முதல்நாள் ஷூட்டிங்கில் தான் பார்க்கப்போகிறேன். பயங்கர எதிர்பார்ப்போடவும், ஆவலுடன் அவரைப் பார்க்கக் காத்திருக்கேன். இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டதற்குப் பலன் கிடைத்திருக்கிறது. மாரிக்குப் பிறகு அமைந்த மிகப் பெரிய படம் இது. கண்டிப்பா எனக்கு நல்ல பெயர் கிடைக்கும். அவரோடு ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும். அவருடன் பணிபுரியும் ஒவ்வொரு நொடியும் என் வாழ்வில் பொன்னான நாளாகும்” என கூறியிருக்கிறார்.

ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்த தளபதி விஜய்!

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகராக விளங்கி வருபவர் பார்த்திபன்.இவரது மகள் கீர்த்தனாவிற்கும் ஸ்ரீகர் பிரசாந்தின் மகன் அக்ஷய் அக்கினேனிக்கும் கடந்த மார்ச் 8-ம் தேதி சென்னையில் திருமணம் நடைப் பெற்றது.

இவர்களின் திருமணத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என பலர் கலந்து கொண்டனர். ஆனால் தளபதி விஜய் கலந்து கொள்ளவில்லை.

அவருக்கு பதிலாக அவரது தந்தை எஸ்.ஏ.சியும் அவரின் அம்மாவும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்நிலையில், தற்போது தளபதி விஜய் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து வருவதால் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன.

Follow Us:
Download App:
  • android
  • ios