நடிகர் விஜய் தனது 50வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பிரபலங்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். அவர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். விஜய்யின் பிறந்தநாள் என்றாலே தமிழ்நாடு முழுக்க திருவிழா கோலம் பூண்டிருக்கும். ஏனெனில் அன்றைய தினம் விஜய்யின் ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவார்கள். ஆனால் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சி சம்பவத்தால் நடிகர் விஜய் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரியளவில் கொண்டாட்டங்கள் இல்லாவிட்டாலும் அவருக்கு திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் என ஏராளமானோர் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
அன்புத் தம்பியும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என நடிகரும், அரசியல்வாதியுமான கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிகர் விஜய்யை சந்தித்தபோது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒன் அண்ட் ஒன்லி தளபதி விஜய் சார். லவ் யூ என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... “ஆணவத்துல மட்டும் ஆடக்கூடாது மச்சி..” நடிகர் விஜய்யின் தெறிக்கவிடும் மாஸ் பஞ்ச் வசனங்கள்..
கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, விஜய்யுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு, லவ் யூ விஜய் அண்ணா, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களின் அன்பு, நீங்கள் தந்த மெமரீஸ், நீங்கள் வைத்த நம்பிக்கை, உங்களுடன் சிரித்து மகிழ்ந்தது என அனைத்திற்கும் நன்றி. இந்த ஓராண்டு என்ன ஒரு அருமையான பயணம், உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது என குறிப்பிட்டு உள்ளார்.
கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து போட்டுள்ள பதிவில், எனக்கு மிகவும் பிடித்த மனிதர் விஜய் அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடந்த ஆண்டு மிகவும் மேஜிக்கலாக அமைந்தது. வாய்ப்புக்கு கோட் பட செட்டில் உங்களுடன் கிடைத்த மெமரிக்கும் நன்றி என குறிப்பிட்டு விஜய்யுடன் எடுத்த கேண்டிட் புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார்.
நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான சனம் ஷெட்டி, நடிகர் விஜய் நடித்துள்ள போக்கிரி திரைப்படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அப்படத்தை காண தியேட்டருக்கு சென்றபோது, அங்கு ரசிகர்களுடன் பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான அன்புச் சகோதரர் விஜய் அவர்களுக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள். பொதுவாழ்வில் இணைந்துள்ள திரு.விஜய் அவர்கள், பூரண நலனுடன் பல்லாண்டு மக்கள் சேவை புரிய வாழ்த்துகிறேன் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... 50 வயதில் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளாரா தளபதி? விஜய்யின் வியக்க வைக்கும் Net Worth விவரம் இதோ
