நடன இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கும் முதல் படமான “குப்பத்து ராஜா” படத்தில் கதாநாயகனாக ஜீ.வி.பிரகாஷ் நடித்து வருகிறார்.

பார்த்திபன், பூனம் பாஜ்வா உள்ளிட்டவர்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளது. இந்தப் படம் வரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளிவரும் எனவும் அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் தலைப்பிற்கு தகுந்தாற்போல படத்தின் பெரும்பாலான சீன்களின் ஷூட்டிங்கும் குப்பம் போல அமைக்கப்பட்டிருந்த செட்டில் எடுத்து முடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டாரின் தலைப்பில் இயக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு வரவேற்பு இருந்தாலும், ஜிவி பிரகாஷின் வழக்கமான படமாக இல்லாமல் இருந்தால் நல்லது என்று திரை ரசிகர்களின் வேண்டுகோள்.