shanmugam shocking decision Anna serial in Tamil : ஜீ 5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அண்ணா சீரியலில் இன்றைய எபிசோடில் சண்முகம் எடுத்த அதிரடி முடிவு குறித்து பார்க்கலாம்.

shanmugam shocking decision Anna serial in Tamil :சரவணன் மீனாட்சிக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து செந்தில் அடுத்தடுத்து சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். மாப்பிள்ளை, கல்யாணம் கண்டிஷன்ஸ் அப்ளை, நாம் இருவர் நமக்கு இருவர் என்று பல சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ஜீ 5 தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் அண்ணா சீரியலில் நடித்து வருகிறார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் இந்த சீரியலில் செந்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து நித்யா ராம், விஜே தாரா, ஹேமா சின்ராஜ், சுனிதா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். ஆக்‌ஷன், டிராமா, ரொமான்ஸ் கலந்த கதையில் உருவாகி வரும் இந்த தொடரை இயக்குநர் துர்கா சரவணன் இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட 700க்கும் அதிகமான எபிசோடுகளை கடந்து அண்ணா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பாக்கியம் வீராவுக்கு விபூதி வைக்க போக சூடாமணி தோன்றிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. பாக்கியம் கண்ணிற்கு சூடாமணியின் உருவம் தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவர் திருநீறு தட்டை கீழே தவற விட்டார். இதைத் தொடர்ந்து எல்லோரும் என்னாச்சு என்னாச்சு பதறிப் போய் கேட்டனர். பின்னர் பிளாஷ்பேக் காட்சி ஒளிபரப்பாகிறது.

அதில், சவுந்தரபாண்டி செய்த குற்றத்திற்கு சூடாமணிக்கு ஜெயிலில் இருந்த விஷயம் அறிந்து பாக்கியம் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். அப்போது அவரை சூடாமணி காப்பாற்றுகிறார். அதன் பிறகு தான் 18 வருஷம் ஜெயிலில் கஷ்டப்பட்டதை சொல்லி சிவபாலனுக்கு வீராவை கட்டி வைக்க சம்மதம் கேட்க, அதற்கு பாக்கியமும் சம்மதம் தெரிவித்துவிட்டார்.

இது குறித்து பரணி சண்முகத்திற்கு தெரிந்தால் கூட அவரும் ஒன்று சொல்லமாட்டான் என்ற தைரியத்தில் பாக்கியத்தை வீட்டிற்கு அழைத்து வருகிறார். சண்முகமும் ஒன்று சொல்லவில்லை. இதற்கு காரணம், அவரது அம்மா சொன்ன பிறகு நான் எப்படி மறுப்பு சொல்ல முடியும் என்று சொல்லிவிட்டார். கடைசியாக வீரா மற்றும் சிவபாலன் திருமணம் முடிவு செய்யப்பட்டது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.