Mahaan : விக்ரம், சிம்ரன், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த மகான் திரைப்படம் தற்போது ஓடிடி-யில் 100 நாட்களைக் கடந்துள்ளது. 

விஜய் சேதுபதியின் பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். முதல் படத்திலேயே வெற்றிவாகை சூடிய இவருக்கு அடுத்ததாக வெளியான ஜிகர்தண்டா படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து ரஜினியுடன் கூட்டணி அமைத்த கார்த்திக் சுப்புராஜ், அவர் நடித்த பேட்ட படத்தை இயக்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படத்தை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்த கார்த்திக் சுப்புராஜ், அடுத்தடுத்து தனுஷ், விக்ரம் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களை இயக்க கமிட் ஆனார். அதன்படி தனுஷை வைத்து அவர் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து விக்ரமின் மகான் படத்தை இயக்கி, அப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட்டனர்.

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. சிம்ரன், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் தற்போது ஓடிடி-யில் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனை படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார் விக்ரம்.

அப்போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மகான் படக்குழுவுக்கு நடிகர் விக்ரம் விருந்து கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Maamanithan : மீண்டும் தள்ளிப்போன மாமனிதன்... படக்குழுவின் முடிவால் அப்செட் ஆன ரசிகர்கள்