Maamanithan : மாமனிதன் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து உள்ளனர். 

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் மாபெரும் வெற்றியை ருசித்தது. விக்னேஷ் சிவன் இயக்கி இருந்த இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன் தாரா, சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கும் மாமனிதன் படத்தையும் வெளியிட முனைப்பு காட்டி வந்தனர். முதலில் இப்படத்தை இந்த 6-ந் தேதி மாதம் வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழு பின்னர் பெரிய படங்களின் வருகையால் மே 20-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அந்த தேதியிலும் போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், மாமனிதன் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஜூன் மாதம் 23-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து மாற்றப்பட்டு வருவதால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

மாமனிதன் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவும், இளையராஜாவும் இணைந்து இசையமைத்து உள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளது இதுவே முதன்முறை ஆகும். மாமனிதன் படத்தை இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி உள்ளார்.

இதையும் படியுங்கள்... கேன்ஸ் விழாவில் பீஸ்ட் நாயகி அணிந்து வந்த செருப்பு விலை இத்தனை லட்சமா?- அந்த காசுல ஒரு சொகுசு காரே வாங்கிடலாமே