வாட்ஸ் மூலம், மிகவும் வித்தியாசமான வேடம் போட்டு, ஆடல், பாடல் என தன்னால் முடிந்த வரை பலரை சிரிக்க வைத்து வருபவர் சித்திரா. இவரை பலரும் தற்போது 'சித்ரா ஆண்டி' என அழைத்து வருகின்றனர். 

இந்நிலையில் இவர் இன்று விஜய் தொலைக்காட்சியில் மா.கா.பா நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரசிகர்களை என்டர்டேயன் செய்தார். அப்போது மா.கா.பா இவரின் கனவு என்ன என்று ஒரு கேள்வியை கேட்டார்.

இதற்கு பதிலளித்த சித்திரா, தன்னுடைய ஆசை சினிமாவில் நடித்தே தீர வேண்டும் என்பது தான் என்றும், அந்த ஆசையில் தான் இது போன்ற வீடியோக்களை வெளியிடத் தொடங்கினாராம். 

மேலும் தனக்கு நடிகை காஜலை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அதனால் தன்னுடைய பெயரை 'சித்ரா காஜல்' என்று மாற்றி வைத்து கொண்டதாக தெரிவித்தார். அதே போல் தன்னுடைய ஆசை நடிகர் ராகவா லாரன்ஸ்சுடன் இணைந்து, ஒரு படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். இவரின் கனவை லாரன்ஸ் நிறைவேற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.