தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ள ஃபேண்டஸி திரைப்படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக இருந்த நிலையில், அதன் ரிலீஸ் தேதி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

Vishwambhara release delay : திரிஷா ஹீரோயினாக நடிக்கும் புதிய திரைப்படம் 'விஸ்வம்பரா'. இது மாறுபட்ட ஃபேண்டஸி த்ரில்லர் படமாக இருக்கும். இப்படத்தை வசிஷ்ட மல்லிடி இயக்குகிறார். முன்னதாக, இப்படம் ஆகஸ்ட் 22 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் முடியாததால் படத்தின் ரிலீஸ் தாமதமாகியுள்ளது. சிரஞ்சீவியின் இந்தப் படம் பெரும்பாலும் 2026 ஜூன் மாதம் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ரஜினியின் ஜெயிலர் 2 படத்துக்கு போட்டியாக இப்படம் ரிலீஸ் ஆகப்போகிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். ஈஷா சாவ்லா மற்றும் ரம்யா பசுபுலேடியும் முக்கிய வேடங்களில் நடிப்பதாக ஒரு தகவல் உள்ளது. ரம்யா பசுபுலேடி, சிரஞ்சீவியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, வசிஷ்ட மல்லிடிக்கும் சிரஞ்சீவிக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

விஸ்வம்பரா ரிலீஸ் தள்ளிவைப்பு

மகேஷ் பாபு கடைசியாக நடித்த 'குண்டூர் காரம்' படத்திற்காக அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வீட்டு செட்டில், 'விஸ்வம்பரா' படத்தின் பாடல் காட்சியில் சிரஞ்சீவியும், த்ரிஷாவும் தோன்றுவதாக ஒரு தகவல் வெளியானது. வசிஷ்டாவின் இந்தப் புதிய படத்தில் சிரஞ்சீவி ஒரு சாதாரண மனிதராக நடிக்கிறார் என்றும், அவரது கதாபாத்திரத்தின் பெயர் டோரா பாபு என்றும், அவர் கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அந்த சாதாரண மனிதன் எப்படி படத்தின் நாயகனாக மாறுகிறான் என்பதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விஷயமாகும்.

சிரஞ்சீவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 'போலா சங்கர்'. அஜித்தின் வெற்றிப் படமான 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவான போதிலும், 'போலா சங்கர்' பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியை சந்தித்தது. உலகளவில் இப்படம் ரூ.47.50 கோடி மட்டுமே வசூலித்ததாக பாக்ஸ் ஆபிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 'வேதாளம்' படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் 'போலா சங்கர்' படத்தில் சிரஞ்சீவி நடித்திருந்தார். இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்கியிருந்தார். ராமபிரம்மம் சுங்கரா இப்படத்தை தயாரித்திருந்தார். கீர்த்தி சுரேஷ் சிரஞ்சீவியின் தங்கையாகவும், தமன்னா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். மஹதி ஸ்வர சாகர் இசையமைத்திருந்தார்.