பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் உலகநாயகன் கமலஹாசன். ஒவ்வொரு வாரத்தின் முடிவிலும் அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பிக்பாஸ் வீட்டில் உள்ள ஹவுஸ் மேட்ஸ்சுடன் பேசுவார். அப்போது அவர்களுடைய குறைகள் மற்றும் நிறைகளை சுட்டிக்காட்டி, வெளுத்து வாங்குவார்.

மற்ற நாட்களை விட இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியை ரசிப்பதற்காக பல ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் ஜூலை 28 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில், சேரன் மற்றும் மீரா மிதுன் ஆகியோர் இடையே நடந்த பிரச்சனை பற்றி கமல் பேசினார்.

அப்போது மீராமிதுன் தன்னை சேரன் தூக்கி வீசியதாக கூறினார். இதுகுறித்த குறும்படமும் ரசிகர்களுக்காக திரையிடப்பட்டது. இறுதியில் மீரா கூறியது உண்மை இல்லை என தெரிய வந்தது. இந்த பிரச்சனை காரணமாக மீராவிற்கு மக்களின் மத்தியில் வாக்கு குறைவாக கிடைத்தது.  இதனால் மீராமிதுன் அன்றைய நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

அப்போது கமலஹாசன் உதாரணத்திற்காக, அந்த காலங்களில் அதிக பேருந்து வசதிகள் கிடையாது.... எனவே கூட்டநெரிசலில் இடையேதான் பயணம் செய்ய வேண்டும். பெண்கள் மீது ஆண்கள் இடிக்க கூடிய சூழ்நிலை வரலாம். ஆனால் அதை தவறாக எண்ணக் கூடாது என பேசினார். மேலும் சிலர் வேண்டுமென்றே பெண்களை உசாசுவதற்காகவே பேருந்து ஏறுவதும் உண்டு எனக் கூறினார்.

திடீரென கையை உயர்த்திய நடிகர் சரவணன், தானும் கல்லூரி காலங்களில் பெண்களை உரசுவதற்காகவே பயணம் செய்ததாக கூறினார். இது அப்போதைக்கு காமெடியாக எடுத்துக் கொள்ளப் பட்டாலும் பின் சில பிரச்சினைகளுக்கு வழி வகுத்தது. இதன் காரணமாக பிக்பாஸ் வீட்டில் இருந்தும் சரவணன் வெளியேற்றப்பட்டார்.  அப்போது சின்மயி சரவணனுக்கு எதிராக குறிப்பிட்ட வீடியோவை பகிர்ந்து, பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறுகிறார் சரவணன். அதையும் ஒளிபரப்புகிறார்கள், பார்வையாளர்களுக்கு நகைச்சுவையாக உள்ளது. சரவணன் பேச்சுக்கு பெண்களும் கை தட்டுகின்றனர். என தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்தார்.

இது இப்படி இருக்க, கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நடிகர் சரவணனுக்கு வழங்கிய கலைமாமணி விருதுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து அதிரடியாக ட்விட் ஒன்றையும் போட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் மாறி மாறி பேசுவதாக விமர்சித்து வருகிறார்கள்.