தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளனர் பிரபல பாடகி சின்மயி.

இவர் ஒரு மேடை நிகழ்ச்சிக்காக தற்போது தனது கணவருடன் அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் அவர்கள் இருவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி காரில் வைத்துள்ளதாக தெரிகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக,   சின்மயியின் காரில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இச்செய்தியை தனது டுவிட்டர் பதிவின் மூலம் பாடகி சின்மயி உறுதிசெய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து விட்டனர்.

அதிர்ஷ்டவசமாக ஒரு நபரின்  உதவியால் சில பொருட்கள் கொள்ளையனிடம் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளது. கேமராவின் மூலம் சிவப்பு தலைமுடி கொண்ட பெண் ஒருவர் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அவரை பிடிக்க போலிசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மீட்கப்படும் என நம்புவதாக சின்மயி தெரிவித்துள்ளார்.