'மீ டூ' பிரச்சனைக்கு பின், பாடகி சின்மயி பல்வேறு வகையில் பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும், அதையும் தாண்டி ஏளனம் செய்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார் . இவருக்கு அவரது கணவர் மற்றும் குடும்பமும் பக்கபலமாக இருந்து வருகிறது.

மேலும் சமீப காலமாக, சாதாரண மக்கள்,  சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து, தனது சமூக வலைதளப்பாக்கத்தில் வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். 

அந்த வாயில் வாலிபர் ஒருவர், அவருடைய பள்ளி பருவத்தில் தன்னுடன் படித்த,  நண்பன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை கூறி ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது. அவர்கள் காப்பாற்ற பட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த சம்பவத்தை சந்தித்த வாலிபர் குறித்து சின்மயி கூறுகையில்... " பள்ளி பருவங்களில் சில ஆசிரியர்கள் பற்றி கேலி பேசுவது வழக்கம். அப்படி பேசியதை கூறி, "நான் சொல்வதை கேட்காவிட்டால் விளையாட்டு ஆசிரியரிடம் மாட்டி விடுவேன் என அந்த பிஞ்சு மனதில் பயத்தை ஏற்படுத்தி, நினைத்தை சாதித்துள்ளார் அவருடன் படித்த சக மாணவன் ஒருவன்".

ஆரம்பத்தில் சிறு சிறு காரியங்களுக்கு பயன்படுத்திய அவன், பிறகு பாலியல் ரீதியாக வன்புணர்வு செய்துள்ளான். ஒருநாள்  வீட்டிற்கு வரவழைத்து கற்பழித்ததாகவும், வெளியே சொன்னால் ஆசிரியரிடம் சொல்லிவிடுவதாக கூறி மிரட்டியதாகவும் கூறியுள்ளான். 

ஆசிரியர் மீது பயம் இருந்தாலும், இது குறித்து மனதில் பூட்டி வைக்காமல் வேறு வழியின்றி இதனை, தனது தந்தையிடம் கூறியுள்ளார் அந்த வாலிபர். உடனே அந்த வாலிபரின் தந்தை அந்த கொடூர நண்பனிடம் இவரை கூட்டி சென்று அவனுடைய கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்த அரை தான் அந்த வாலிபரை அந்த கொடூரனிடம் இருந்து காப்பாற்றியுள்ளது.  இந்த தகவலை தான் சின்மயியுடன் அந்த வாலிபர் பல வருடங்களுக்கு பின் பகிர்ந்துள்ளார்.

 

இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்த அவர், பெண்கள் மட்டுமல்ல ஆண் குழந்தைகளும் பாதுகாக்கப்படவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.