பிரபல பாடகியும், டப்பிங் ஆர்டிஸ்டுமான சின்மயி சமீப காலமாகவே அடுக்கடுக்காக, பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் சிலர் ஆறுதல் கூறி வந்தாலும், திரையுலகை சேர்ந்தவர்களே, இவரை எதிர்த்தும் வருகிறார்கள்.

இதனால், முன்பு போல் பாடுவதற்கும், டப்பிங் பேசுவதற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்.

குறிப்பாக, பெண்களுக்கு சில விஷமிகளால் கொடுக்கப்படும் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிராக, அழுத்தமாக தன்னுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். முகம் தெரியாத சிலர் தங்களுடைய வாழ்க்கையில் நடந்தவற்றை கூறினாலும், அந்த பதிவையும் ஷேர் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார்.

இந்நிலையில் இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்து முடிந்த, நாடாளு மன்ற தேர்தலில், வாக்கு போட்டதை, தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் புகைப்படம் வெளியிட்டு அதனை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இதில் தன்னுடைய கணவர் ராகுல் மட்டும் மிஸ்ஸிங், என குறிப்பிட்டிருந்தார்.

இதில் தான் பிரச்சனையே ஆரம்பமாகியுள்ளது. எதற்கு எடுத்தாலும் நீதி, நியாயம் என பேசும் சின்மயி... இந்த நாட்டில் உள்ள குடிமகன்களின் தலையால கடமையான ஓட்டு போடுவதை உங்கள் கணவர் தவிர்த்து ஏன்? இது குறித்து அவரிடம் கேளுங்கள்... என பலர் சமூக வலைத்தளத்தில் சின்மையிடம் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 

 

நல்லதை செய்யப்போய்... இதுவும் சின்மயிக்கு பிரச்சனையா முடிஞ்சிடுச்சே... என மைட் வாய்ஸ் கேட்கிறது, சின்மயி ஆதரவாளர்களிடம்.