வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு, கலைப்பில் இருக்கும் இல்லத்தரசிகளின் ஒரே பொழுது போக்கு என்றால் அது தொலைக்காட்சியும், அதில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களும் தான்.  

வீட்டு வேலைகளை செய்து முடித்து விட்டு, கலைப்பில் இருக்கும் இல்லத்தரசிகளின் ஒரே பொழுது போக்கு என்றால் அது தொலைக்காட்சியும், அதில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி தொடர்களும் தான். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெற்றோர்களுடன் சேர்ந்து இது போன்ற தொலைக்காட்சி தொடர்களை குழந்தைகளும் பார்க்கும் நிர்பந்தம் ஏற்படுகிறது. திரைப்படங்களை விட தொலைக்காட்சி தொடர்களில் ஆபாச வார்த்தை, மற்றும் ஆபாச காட்சிகள் இருக்காது என்பதால் பெற்றோர்களும் குழந்தைகள் பார்த்தல் தவறில்லை, என நினைக்கிறார்கள்.

இந்நிலையில், ராகுல் என்பவர் சின்மயிக்கு போட்டுள்ள ஒரு பதிவில், தொலைக்காட்சி சீரியல்களிலும் ஆபாசம் உள்ளே புகுந்து விட்டதாக கூறி, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் குறித்தும், அதில் பேசிய வசனத்தை பற்றியும் பகிர்ந்துள்ளார்.

Scroll to load tweet…

இது குறித்து அவர் கூறுகையில் "இரவு நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில், பெண் ஒருவர் சில ரவுடிகளிடம் தன்னுடைய தங்கையை பழிவாங்குவதற்காக ஆட்களை வைத்து கற்பழிக்க சொல்கிறார். இது குறித்த காட்சி 15 நிமிடங்கள் ஒளிபரப்பானது. அதிலும் 10 முறை கற்பழிக்க வேண்டும் என கூறியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

 இதற்கு பொங்கி எழுந்து பதில் அளித்துள்ள சின்மயி, தவறான நோக்கத்துடன்ஒளிபரப்பபடும் தொலைக்காட்சி தொடர்கள் குறித்து, மத்திய ஒளிபரப்புத்துறையிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Scroll to load tweet…