வைரமுத்து என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என ME TOO டேகில் பிரச்சனையை ஆரம்பித்து வைத்தது என்னவோ சின்மயி தான்.  ஆனால் அந்த பிரச்சனை குறித்து தொடர்ந்து வரும் விமர்சனங்களால் , இந்த விவகாரம் இன்னும் நீண்டு கொண்டே போகிறது. அதிலும் சின்மயி இத்தனை நாள் கழித்து இந்த விவகாரத்தை ஆரம்பிக்க காரணம் என்ன? இது தேவை இல்லாத வேலை .. என அவருக்கு எதிராக வரும் விமர்சனங்கள் தான் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.

கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய புள்ளியாக இருக்கும் வைரமுத்துவுக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் எழுப்பப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு இது என , பலரும் வைரமுத்துவிற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகின்றனர். வைரமுத்துவும் அதற்கேற்ப தன்னை நியாயப்படுத்தும்படியாக வீடியோ வேறு வெளியிட்டிருந்தார். என்ன தான் சின்மயி அதற்கு பதிலடி கொடுத்தாலும் வரவர சின்மயிக்கு எதிராக தான் கருத்துக்கள் அதிகம் வந்து கொண்டிருக்கிறது.


இதனிடையே இதெல்லாம் என்ன பிரச்சனை? சின்மயி அம்மா செய்ததை விடவா இதெல்லாம் பெருசு , என கேள்வி எழுப்பி இருக்கிறார் இசையமைப்பாளர் இனியவன். வெளிநாட்டில் வைத்து நடைபெற்ற இசைக்கச்சேரி ஒன்றின் போது, சின்மயி-ன் அம்மா ஒயின் குடித்துவிட்டு செய்த ரகளையில் அந்த கச்சேரியே அல்லோலப்பட்டது.

மாணிக்க விநாயகம் எல்லாம் தெறித்து ஓடிவிட்டார் அந்த அளவிற்கு அன்றைக்கு அட்டூழியம் செய்தார் சின்மயி-ன் அம்மா. இந்த அதகளம் அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்குமே தெரியும் என தெரிவித்திருக்கிறார் இனியவன். ஏற்கனவே வீக்காகி கொண்டிருக்கும் சின்மயி-ன் தரப்பு இது போன்ற தகவல்களால் கூடுதள் தள்ளாட்டத்திற்கு உள்ளாகி இருக்கிறது.