'மீ டூ' அமைப்பு மூலம் பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது, பாலியல் குற்றச்சாட்டை கூறி, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவை பரபரப்பாக்கியவர் பாடகி சின்மயி. இவரது இந்த புகாரால் #metoo என்ற ஹாஸ்டேக் பிரபலமானது. இதன் மூலம் திரையுலகை தவிர, அலுவலகங்களின் வேலை செய்யும் பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்திற்கு பின், சின்மயிக்கு பாடும் வாய்ப்பு மற்றும் டப்பிங் வாய்ப்பு கிடைக்காமல் போனது, எனஅவரே தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது தமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது பொள்ளாச்சியில், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, சில காம கொடூரர்கள், சீரழித்த சம்பவம். இப்படி செய்தவர்களை ஜாமினில் விடுத்துள்ளது மேலும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.

தற்போது இந்த சம்பவத்திற்கு எதிராக பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை பலர் குரல் கொடுத்து வரும் நிலையில் பாடகி சின்மயி ஆதங்கத்தோடு சில கேள்வியை எழுப்பியுள்ளார். 

இது குறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட பதிவில், இதுவரை பொள்ளாச்சியில் மட்டும் 200 பெண்கள் 20 ஆண்களால் கற்பழிக்கப்பட்டுள்ளனர். நாடு எங்கு செல்கிறது? இதுகுறித்து எதாவது கைது நடந்துள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.