அண்மைக்காலமாக பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட பெண்கள் அந்தச் சம்பவங்களை `மி டூ’ என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தங்களை அடையாளம் காட்டியோ, காட்டாமலோ, அதேபோல காரணமான ஆண்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுட்டிக்காட்டும் இந்த `மி டூ #MeToo’  தற்போது தமிழகத்தையே அதிரச் செய்துள்ளது.

கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’ என, பாதிக்கப்பட்ட ஒரு பெண் பத்திரிக்கையாளர், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்ததுதான் இந்த விவகாரம் முற்ற காரணமாக அமைந்தது.

அந்த டுவிட் குறித்து   பாடகி சின்மயி `அவர் பற்றி எல்லாருக்கும் தெரியும்; நிறைய பாடகிகள் இதை அறிவார்கள். அவர் இப்படித்தான்; என்கிற பொருள்பட கருத்துப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் பற்றிக் கொண்டது.

மேலும் அவர் 2004-ல் ஸ்விட்சர்லாந்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக `வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் வெளியீட்டு விழா நடந்தது. விழா முடிந்ததும் மற்ற அனைவரையும் அனுப்பிவிட்டு, என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்கச் சொன்னார்கள், பிறகு, வைரமுத்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு என்னை மட்டும் அழைத்தார்கள். அழைத்தவர்களின் வார்த்தைகளே நோக்கத்தைக் காட்டியதால் நான் மறுத்துவிட்டேன். பிறகு, அதற்காக மிரட்டும் தொனியிலும் வார்த்தைகளை எதிர்கொண்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

இதற்கிடையில், ஸ்விட்சர்லாந்தில் நடந்த நிகழ்ச்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சுரேஷ் என்பவர் மறுத்திருக்கிறார்.

அந்த சுரேஷ் வைரமுத்துவுக்கு நெருக்கமான நண்பர்; வைரமுத்துவின் விருப்பத்தின் பெயரிலேயே அந்த நிகழ்ச்சிக்கு சின்மயி அழைக்கப்பட்டார் என்றும் தகவல்கள் பரவின. சின்மயி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து, அண்மைக்காலமாக பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறுவது நாகரீகமாகிவிட்டது என குறிபிபிட்டிருந்தார்.

அதே நேரத்தில் சின்மயியிடம், `எப்போதோ நடந்த சம்பவத்தை இப்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்று பலர் கேள்வி எழுப்பியபோது இதற்கு அவர் காரணம் இதுதான்…’

`மி டூ’ மூவ்மென்ட் இப்போதுதான் வந்திருக்கிறது. எனவே, பேச இது சரியான தருணமே. நிறைய பேர் இதைக் கடந்தே வந்திருப்பார்கள். பலரும் பல காரணங்களால் இதைப் பேச முடியாதவர்களாக இருக்கலாம் என்று கூறிய சின்மயி தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.

மற்றொன்று . எனக்கு என் வீடும் கணவரும் சப்போர்ட்டாக இருக்கிறார்கள், அதனால் தான் நான் தைரியமாக பேசுகிறேன் என இரண்டு காரணங்களைத் சின்மயி தெரிவித்தார். என்கிறார்.