‘தொடர்ந்து பேட்டிகள் கேட்டு என் அம்மாவை தொந்தரவு செய்யாதீர்கள். அவரால் ஓரளவுக்குதான் தொந்தரவுகளை தாங்கமுடியும்’ என்று தமிழ்  பத்திரிகையாளர்களுக்கு மட்டும் எரிச்சலுடன் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார் நவீன ஆண்டாள் சின்மயி.

அவ்வளவு செய்திப்பஞ்சமா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கமா என்று தெரியவில்லை. கடந்த நான்கைந்து நாட்களாகவே பாடகி சின்மயியையும், அவரது அம்மாவையும் போட்டிபோட்டு பேட்டிகண்டன வட இந்திய ஊடகங்கள். அதில் பல பேட்டிகளில் சின்மயியை விட அவரது அம்மா பல தகவல்களை சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டார்.

வழக்கம்போல் இதை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட தமிழ் ஊடகங்கள் கடந்த இரு தினங்களாக சின்மயியை விட அவரது அம்மாவை பேட்டி காண அதிக ஆர்வம் காட்டினார்கள்.

இந்த போன் தொல்லைகள் மிகவும் அதிகமாகவே இன்று ‘சென்னை ஊடகர்களே [கவனிங்க வட இந்திய ஊடகங்களுக்கு இது பொருந்தாது] என் அம்மாவுக்கு 69 வயதாகிறது. அவரால் ஒரு அளவுக்குத்தான் பிரஷர்களைத் தாங்கமுடியும். எனவே தொடர்ந்து பேட்டிகேட்டு அவரை நச்சரிக்காதீர்கள். அவரை விட்டு தள்ளி நில்லுங்கள்’ என்று சற்று கடுமையான வார்த்தைகளில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.