Asianet News TamilAsianet News Tamil

வெங்கட் பிரபுவுடன் பேச்சுவார்த்தை... சிம்புதேவன் படத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

கூட்டு உழைப்பால் வெளியான இந்த திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியான நிலையில் சிறிது நேரத்திலேயே அந்த தளத்தில் இருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Chimbudevan Kasada Thabara released in OTT today current status
Author
Chennai, First Published Aug 27, 2021, 11:07 PM IST

வடிவேலு நடிப்பில் வெளியான "இம்சை அரசன் 23ஆம் புலிகேசி" திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநகராக அறிமுகமானவர் சிம்புதேவன். அதன் பின்பு அறை எண் 305 இல் கடவுள், இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், புலி போன்ற படங்களை இயக்கினார். நீண்ட் இடைவெளிக்குப் பிறகு  இயக்குநர் வெங்கட் பிரபுவும், டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரனும் இணைந்து தயாரித்துள்ள ‘கசட தபற’ படத்தை சிம்புதேவன் இயக்கியுள்ளார். 

Chimbudevan Kasada Thabara released in OTT today current status

ஆறு கதைகள் தனித்தனியாக சொல்லப்பட்டாலும், இறுதியில் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைவது போல திரைக்கதையை வடிவமைத்து இருக்கிறார் சிம்புதேவன். இந்த ஆறு கதைகளில் சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், ரெஜினா, பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி, வெங்க பிரபு, பிரேம்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சி எஸ், ஷான் ரோல்டன், பிரேம்ஜி அமரன் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்கள். அதேபோல் 6 ஒளிப்பதிவாளர்கள், 6 எடிட்டர்கள் படத்தில் பணியாற்றியுள்ளனர். 

Chimbudevan Kasada Thabara released in OTT today current status

இப்படி கூட்டு உழைப்பால் வெளியான இந்த திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியான நிலையில் சிறிது நேரத்திலேயே அந்த தளத்தில் இருந்து நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  வெங்கட்பிரபு நிறுவனம் தங்களுக்கு 88 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் இதுவரை அந்த தொகையை தயாரிப்பு நிறுவனம் வழங்கவில்லை என வெளியூர் படப்பிடிப்புகளுக்கு யூனிட் வழங்கும் ஏ.சி.எஸ் (ACS) என்ற நிறுவனம் நீதிமன்றத்தில் படத்திற்கு தடை வாங்கியுள்ளது தெரியவந்தது.  இதன் காரணமாக சோனி ஓடிடி தளத்திலிருந்து கசட தபற திரைப்படம் நீக்கப்பட்டது. இந்நிலையில் ACS (Out Door Unit) நிறுவனத்திடம் இருந்து NOC கிடைத்த பிறகு SonyLIV தளத்தின் கசட தபற திரைப்படம் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையில் வெங்கட் பிரபுவுடன் ACS நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Follow Us:
Download App:
  • android
  • ios