சின்மயி ராதாரவி பஞ்சாயத்துகளை தொடர்ந்து எழுதுவதற்கு சலிப்பாக இருக்கிறது. ரெண்டு பேருமே கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சாமிகளா என்று யாரை நாட்டாமையாகப் போட்டு தீர்ப்பு சொல்வது என்று குழம்பிவரும் வேளையில், சில வருடங்களாக ராதாரவி தன் பெயருக்கு முன்னால் போட்டுவரும் டத்தோ என்கிற பட்டமே ஒரு சரியான டுபாக்கூர் சமாச்சாரம் என்று சந்தி சிரிக்கவைக்கிறார் சின்மயி.

சமீப வருடங்களாக நடிகர் ராதாரவி தனது பெயருக்கு முன்பாக டத்தோ என்கிற பெயரை போட்டுக் கொள்கிறார். அவர் நடிக்கும் படங்களிலும் டைட்டில் கார்டில் டத்தோ ராதாரவி என்றுதான் போட வேண்டும் என்பது அவரது உத்தரவு. இந்த டத்தோ என்கின்ற பட்டம் மலேசியாவில் ஒரு மாநிலத்தின் அரசினால் தரப்படுகிறது. அதை இந்தியாவில் வாங்கியிருக்கும் ஒரே ஆள் நான்தான் என்று ராதாரவி பல மேடைகளில் பெருமையாகச் சொல்லியிருக்கிறார்.

இப்போது அந்த டத்தோ விருதினை யார் கொடுத்தது என்று சின்மயி கேள்வி கேட்டு துளைத்தெடுத்தார். அவரது கேள்விக்கு மலேசியா மாநில அரசு பதில் அளித்துள்ளது. நாங்கள் ராதாரவிக்கு அந்த விருதினை வழங்கவில்லை என்று..!

இதை வழக்கம்போல் தனது ட்விட்டர் பதிவில் போட்டு நாறடித்து வரும் சின்மயி மலேசிய அரசின் பதிலையும் வெளியிட்டு ராதாரவியின் டத்தோ பதவியின் மானத்தை வாங்கியுள்ளார்.