உறவுக்கு கைகொடுப்போம் என்கிற சின்னத்திரை சீரியல் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் யுவினா பார்த்தவி.

பின் சிறு வயதிலேயே அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்ததால் முன்னனி ஹீரோக்கள் ஆனா விஜய், அஜித், சூர்யா போன்ற ஹீரோக்களின் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர்களுடன் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் கூறியுள்ளார் யுவினா. மேலும் தல அஜித் பற்றி அவர் கூறுகையில், தான் நடித்த ஹீரோக்களில் தனக்கு மிகவும் பிடித்தவர் அஜித் தான் என்றும், அவர் எப்போதும் தன்னுடன் விளையாடி கொண்டே இருப்பார். நான் வீரம் படத்தின் ஷூட்டிங் போது எப்போதுமே விளையாடி கொண்டு சந்தோஷமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

அதே போல் தளபதி விஜய் பற்றி கூறியபோது அவர் தன்னிடம் அதிகமாக பேச வில்லை ஆனால் தன்னுடைய நடிப்பை பார்த்து பாராட்டியதாக கூறியுள்ளார்.

நடிகர் சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேசிய யுவினா, நான் எப்போதும், அதிகமாக லிப் ஸ்டிக் போட்டு கொண்டே இருப்பேன் அதனால் அவர் தன்னை லிப் ஸ்டிக் ராணி என்று தான் கூப்பிடுவார் என ஜாலியாக கூறியுள்ளார்.