குழந்தை நட்சத்திரமாக பல இந்தி சீரியல்களில் நடித்து மிக சிறிய வயதிலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் ஷிவலேக் சிங். இவர் நேற்று நடந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14 வயதே ஆகும் ஷிவ்லேக் சிங்,  சங்கத் மோட்சன் ஹனுமன்,  சேசுரால் சிம்ரா கா,  உள்ளிட்ட பல சீரியல்களிலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு புகழ் பெற்றவர்.  

இவர் நேற்றைய தினம் ராய்பூர் வழியாக காரில் தன் தாய்,  தந்தையுடன் சென்றுகொண்டிருந்த போது,  எதிர்பாராத விதமாக எதிரே வந்த டிரக் மீது இவர்கள் சென்ற கார் மோதி அப்பளம் போல் நொறுங்கியது.  இந்த விபத்தில் ஷிவ்லேக் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இவருடைய தாய் மற்றும் தந்தை பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஷிவ்லேக்கின் தாய் லோக்னா தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோர விபத்து குறித்து ராய்ப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.