Asianet News TamilAsianet News Tamil

கவிப்பேரரசு புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்..! ஓ.என்.வி விருது பெற்ற வைரமுத்துவுக்கு முதல்வர் வாழ்த்து!

கவிஞர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி. இலக்கிய விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள மொழி அல்லாத தமிழ் இலக்கியவாதி ஒருவருக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த விருதை வைரமுத்து பெறுவது குறித்து, அறிக்கை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.
 
chief minister wish kaviperarasu vairamuthu
Author
Chennai, First Published May 27, 2021, 2:59 PM IST

கவிஞர் வைரமுத்துவிற்கு ஓ.என்.வி. இலக்கிய விருது தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள மொழி அல்லாத தமிழ் இலக்கியவாதி ஒருவருக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த விருதை வைரமுத்து பெறுவது குறித்து, அறிக்கை வெளியிட்டு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

மலையாளத்தில் சிறந்த கவிஞராகவும், பாடலாசிரியராகவும் அறியப்படும் ஓ.என்.வி.குறுப், பெயரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. மலையாள கவிஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் இந்த விருது, இம்முறை... வைரமுத்துவுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இவர் எழுதிய 'நாட்படு தேறல்' எங்கிற தொகுப்பில் இடம் பெற்ற, என் காதலா என்கிற பாடலுக்காக வழங்கப்பட்டுள்ளது.

chief minister wish kaviperarasu vairamuthu

இதற்க்கு நன்றி கூறும் வகையில் கவிஞர் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " 

அணைகடந்த வெள்ளம்போல்
'என் காதலா' என்ற
என் ஆறாம் பாட்டுக்கு
நீங்கள் வழங்கிவரும் வரவேற்பால்
என் மனசுக்குள் மயிலிறகு ஊர்கிறது.

நீங்கள் 
ஒருமுறை இட்ட பதிவை
இருமுறை வாசிக்கிறேன்.

மேகமில்லாமல் 
ஏது மழை?
நீங்களில்லாமல் 
ஏது கலை?

நன்றி. என தெரிவித்துள்ளார்.

chief minister wish kaviperarasu vairamuthu

மேலும் இந்த விருது வைரமுத்துவுக்கு வழங்க பட்டதற்கு பிரபலங்கள் முதல் அரசியல் வாதிகள் வரை, பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது... "தமிழ்நாட்டின் பெருமைக்குரிய இலக்கியவாதியான கவிப்பேரரசு வைரமுத்துவின் புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம் மின்னுவது போல கேரளத்தின் புகழ்மிகு ஓஎன்வி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios