அதைவிட ஆச்சரியம் என்னவென்றால் ‘நடிகர் விஜய் சேதுபதி சொன்னதால்தான் நான் பிக்பாஸ் வீட்டினுள் வந்தேன்’ என்று துவக்கத்தில் சேரன் கூறியிருந்தார். வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் இப்போதும் அதையே கூறியிருக்கிறார். 

அதோடு நின்றுவிடாமல் தேவர் மகன் - 2 படத்தை எடுக்க தான் தயாராக இருப்பதாகவும் சேரன் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டினுள் இருக்கையில் இந்த ஐடியா தனக்கு வந்ததாகவும், தன்னிடம் இதற்கான கதை இருக்கிறதென்றும், கமலுக்காக காத்திருப்பதாகவும் சேரன் கூறியிருக்கிறார். 

இயக்குநர் எனும் முறையில் சேரன் பல முக்கிய நடிகர்களை இயக்கி, ஆட்டுவித்திருக்கிறார். ஆனால் பிக்பாஸின் இயக்குநர் எனும் முறையில் கமல்ஹாசன் அவரை ஆட்டுவித்தார். 

இப்போது ‘தன்னை ஆட்டுவித்த கமலை பழியெடுக்கும் வகையில் அவரை ஆட்டிப்படைக்க சேரன் தயாராகிவிட்டார். தேவர்மகன் 2 வில் கமல் சிக்குவாரா?’ என்று கலகலப்பான பதிவுகளை உருவாக்கிக் கொண்டுள்ளனர் நெட்டிசன்கள்