மாற்றுத்திறனாளிகளின் குரலாக ஒலித்த‘பொற்காலம்’ திரைப்படம் அந்த காலத்தில் மறுமலர்ச்சியாக பார்க்கப்பட்டது. இந்த படத்தின் 22வது ஆண்டை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் சேரனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினி செய்த மறக்க முடியாத காரியம்... பிக்பாஸ் பிரபலத்தின் அதிர்ச்சி தகவல்...!
ரஜினிகாந்த் பல ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு செய்த காரியத்தை சேரன் இன்று வரை மறக்காமல் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சேரன் இயக்கிய ‘பொற்காலம்’ படம் வெளியாகி இத்துடன் 22 ஆண்டுகள் ஆகிறது. முரளி, மீனா, சங்கவி, வடிவேலு ஆகியோர் நடித்த‘பொற்காலம்’ படம் 100 நாட்கள் வரை ஓடி சாதனை படைத்தது. புதுமையான கதையை அழகாக கையாண்ட இயக்குநர் சேரனை, பாரதிராஜா உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் பலரும் புகழ்ந்தனர். மாற்றுத்திறனாளிகளின் குரலாக ஒலித்த‘பொற்காலம்’ திரைப்படம் அந்த காலத்தில் மறுமலர்ச்சியாக பார்க்கப்பட்டது. இந்த படத்தின் 22வது ஆண்டை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் சேரனுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக‘பொற்காலம்’ திரைப்படம் குறித்து மனம் திறந்துள்ள சேரன் தனது மலரும் நினைவுகளை முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில்,
1997... அக்டோபர் மாதம் 30ம் தேதி வெளியானது..
இன்றும் அந்த படம் பற்றிய நினைவுகள்..
இன்னும் என்னுள் வாழும் மாணிக்கம், மரகதம், பஞ்சவர்ணம், ராசுவேளார்....
ஒளிபதிவாளர் ப்ரியன் அவர்களும் முரளி சார் மணிவண்ணன் சார் மூவருமே இப்போது இல்லை..
அவர்களின் உழைப்பும் கதாபாத்திரங்களும் வாழ்கிறது..
கலைக்கு மட்டுமே காலம் கடந்து வாழும் சக்தி இருக்கிறது...
முதன்முதலாக குயவர்களுக்கான கலையான மண்பாண்டம் செய்யும் தொழிலை திரைக்கு அறிமுகம் ஆக்கிய படம். தொடர்ந்து 40 நாட்கள் அடைமழையிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி
100 நாட்களை கடந்த படம்..
நல்ல படைப்பு என இதுவரை கொண்டாடிக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நன்றி... என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ‘பொற்காலம்’படத்தை பாராட்டி ரஜினி தனக்கு தங்கச் சங்கிலியை பரிசளித்தை நினைவு கூர்ந்துள்ள சேரன். ரஜினியின் செயலை என்னால் மறக்கவே முடியாது என தனது டுவிட்டர் பதிவில் நெகிழ்ந்துள்ளார். அருணாச்சலம் படவிழாவில் தன்னை அழைத்த ரஜினி, பொற்காலம் படத்தை புகழ்ந்து தனக்கு தங்க சங்கிலியை பரிசாக அளித்ததை குறிப்பிட்டுள்ளார்.
1997ம் ஆண்டு வெளி வந்த‘பொற்காலம்’ படத்தில், ‘தஞ்சாவூரு மண்ணை எடுத்து’, ‘ஊனம், ஊனம் இங்கே’ போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. 90 கிட்ஸ்களை கவர்ந்த சேரனை 2K கிட்ஸ்களும் கூட மறக்காமல் புகழும் அளவிற்கு புதுமையான இயக்குநர். கடந்த 23 ஆண்டுகளாக அசத்திய முயற்சிகளை எடுத்து வரும் சேரனின், ‘ராஜாவுக்கு செக்’படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
