பிக்பாஸ் வீட்டில் இன்றையநாள், எலிமினேஷன் படலத்திற்கான நாமினேஷன் சுற்று நடக்கிறது. இதில் பிரபலங்கள் தாங்கள் எலிமினேட் செய்ய விரும்பும் இரண்டு பிரபலங்களை காரணத்தோடு கூற வேண்டும்.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், நடிகர் சேரன்... "இரண்டு பேருக்கு எந்த ஒரு முகமே இல்லாமல் உள்ளனர் என்று தர்ஷன் மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரது பெயரையும் கூறுகிறார். மேலும் இங்கு இருக்கும் முகங்களின் இடையில் இவர்கள் வேண்டாம் என தோன்றுவதாகக்  காரணம் கூறினார்.

இவரைத் தொடர்ந்து நடிகர் சரவணனின் நாமினேட் படலம் காட்டப்படுகிறது. அவர் நடிகர் சேரனின் பெயரையும் பாத்திமா பாபுவின் பெயரையும் கூறுகிறார்.  இதற்கு காரணம் கேட்கும் பிக்பாஸ்யிடம் சேனன் டாமினேட் செய்வதாகவும்,  அவர் டைரக்டர் என இங்கேயும் ப்ரூவ் பண்ண நினைக்கிறார் என கூறுகிறார். அதைத் தொடர்ந்து பாத்திமா பாபு அனைத்திலும் குறுக்கிடுகிறார் என கூறுகிறார்.

இதில் வியக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தன்னுடைய மகள் என லாஸ்லியாவை நேற்று செல்லமாக அரவணைத்த சேரன் இன்று அவரையே நாமினேட் செய்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.