இவருக்கு முன்னதாக இந்த கேரக்டரில் ராஜு முருகனின் ‘குக்கூ’ பட நாயகி மாளவிகாதான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரை  நேரில் சந்தித்த சேரன் குழந்தைத்தனம் சற்றும் மாறாத மாளவிகா அக்கேரக்டருக்கு பொருந்தாது என முடிவு செய்து திருப்பி அனுப்பிவிட்டார். 


நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பின் சேரன் இயக்கி முக்கியப் பாத்திரத்தில் நடித்துவரும் ‘திருமணம்’ படத்தின் நாயகி தேர்வானது எப்படி என்பது குறித்து சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கு ஜோடியாக சேரனின் ‘திருமணம்’[சில திருத்தங்களுடன்] படத்தில் கவிதா சுரேஷ் என்பவர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு முன்னதாக இந்த கேரக்டரில் ராஜு முருகனின் ‘குக்கூ’ பட நாயகி மாளவிகாதான் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அவரை நேரில் சந்தித்த சேரன் குழந்தைத்தனம் சற்றும் மாறாத மாளவிகா அக்கேரக்டருக்கு பொருந்தாது என முடிவு செய்து திருப்பி அனுப்பிவிட்டார்.

சில வாரங்கள் கடந்த நிலையில், அடுத்த நாயகி தேடும் படலத்தில் சேரன் இருந்தபோது, அவரது அலுவலகத்தின் அழைப்பு மணி ஒலிக்க போய்த்திறந்தபோது வாசலில் நின்றுகொண்டிருந்தவர் கவிதா சுரேஷ். சேரன் கதவைத்திறக்க அதிர்ச்சி அடைந்த கவிதா சுரேஷ், தான் அதே அபார்ட்மெண்டில் வசிக்கும் டான்ஸ் மாஸ்டர் ஒருவரைச் சந்திக்க வந்திர்ப்பதாகவும், தவறுதலாக காலிங் பெல்லை அழுத்தி விட்டதாகவும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

உடனே சேரனுக்கு ‘இவர்தான் இக்கதைக்கு சரியான ஆள்’ என்று மண்டையில் பல்பு எரிய, அதே டான்ஸ் மாஸ்டர் மூலம் கவிதா சுரேஷைத் தேர்வு செய்தாராம். சேரனின் ரசனையை மெச்ச ‘குக்கூ’ மாளவிகாவின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளோம்.