பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும், தலைவர் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்படுகிறார்.  அதாவது பிக்பாஸ் வீட்டில் நடக்கும் லக்ஸூரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக விளையாடும் போட்டியாளர்களில் மூவர்  தேர்வுசெய்யப்பட்டு, அவருக்கு கேப்டன் பதவிக்கான போட்டி நடைபெறும்.  மோசமாக விளையாடியவர்கள் இருவர் ஜெயிலுக்கு அனுப்ப படுவார்கள். 

அந்த வகையில் கடந்த வாரம் ,பிக்பாஸ் வீட்டின் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் நடிகை மதுமிதா.  இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால்,  திடீர் என வெளியேற்றப்பட்டார். இதனால் இவரை தொடர்ந்து அடுத்து இடத்தில் இருந்த, நடிகை ஷெரீனுக்கு தலைவர் பதவி சென்றது.

இந்நிலையில் இன்றைய தினம், பிக்பாஸ் வீட்டின் அடுத்த தலைவர் யார் என தேர்வு செய்யப்படுவதற்கான போட்டி நடைபெறுகிறது.  இதில் சேரன், சாண்டி மற்றும் லாஸ்யா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.  

இதில் என்ன சுவாரஸ்யம் என்றால், கடந்த வாரத்தை போல் இவர்கள் மூவருக்கும் எந்த ஒரு போட்டியும் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக, ஒரு பவுலில் இவர்களது மூவரது பெயரும் எழுதி போடப்பட்டிருக்கும்.  யாருடைய பெயரை போட்டியாளர்கள் குலுக்கல் முறையில் எடுக்கிறார்களோ, அவரே இந்தவார தலைவர்.

அதன்படி அதிகமாக எடுக்கப்பட்டது நடிகர் சேரனின் பெயர் தான். எனவே பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார தலைவராக சேரன் தேர்வு செய்யப்படுகிறார். இதற்கு மற்ற போட்டியாளர்கள் அவருக்கு தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிப்பதும் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரோமோ மூலம் தெரிகிறது.